தேடல்

Monday 19 December 2011

ஓடிப் போகுமா... கலாச்சாரம் ??

ஒரு தாயின்
கதறல்களும்,
கண்ணீர் சிதறல்களும்,
இங்கே பதிவாகிறது ...
சோக கீதங்களை - தன்
மார்பில் சுமந்து கொண்டு....


மாதம் பத்தையும்,
பத்திரமாய் வழியனுப்பி விட்டு,
மறு பிறவி எடுத்தேனே...
வழியனுப்பிய துக்கத்தில் - உன்
பிறவி எடுக்க...


நீ
மழலையாய்
மடி தவழ்ந்த காலங்கள்  - நான்
துயில் துறந்தேன்...
துதி பாடி, தூங்க வைத்தேன்.
அமுதூட்டி !


நீ
மங்கையாய்
படி தாண்டிய கணங்கள் - நான்
மீண்டும் துயில் துறக்கிறேன். - இப்போது
துயில் பாடுவது, நகர் மக்கள்
நஞ்சூட்டி ..!


அன்று,
புது பிறவியாய் - நான்
கண் விழித்து கலங்கியது - உன்
முகத்தில் தான்...


இன்று,
உன் முகம் விழிக்க - என்
கண்கள் மறுக்கிறது
வழியும் கண்ணீரால்...


நீ
கல்வியும் கற்றாய்,
இலவச இணைப்பாய்,
காதலையும் கற்றாய் - அதில் ஏன்
நம் கண்ணியத்தை விற்றாய்...?


காதலில் விழுந்தது.... நீ
காயங்கள் எனக்கா..?


நான்
உன்னை ஈன்ற பொழுதின்
மறு பிறவி...
ஒரு முறை தான்...
நீ
என்னை செயலால், கொன்ற பொழுதின்
ஈனப்பிறவி
எத்தனை முறையோ !


உன்னால்
சிதைந்த பாரம்பரியம்,
தலைமுறையின் அவமானம் ?


தவறுகள்
என் பக்கமும் தான்..
ஆம்....


நான்
மறந்தது .
உனக்கு அமுதூட்ட அல்ல..
நம்
கலாச்சார சித்தாந்தங்களை ஊட்ட...


கை கொட்டி சிரிக்கிறது
நம் கலாச்சாரம் !
ஓரமாய் நின்று.... 
"ஓடியது நான் அல்ல" என்று...


"வேடிக்கை
பார்த்தது போதும் - தாயே.....
அமுதோடு ஊட்டுங்கள்
என்னையும் சேர்த்து...."


உங்கள்
பாரம்பரியம் பாதுகாக்கப்படும்
கண்ணியம் காக்கப்படும்..
கலாச்சாரம் அழைப்பு விடுக்கிறது !


ஓடிப்போகுமா ... கலாச்சாரம் ?

4 comments:

  1. நம் சமுதாயத்திற்கு கலாச்சார அழகு கொடுக்கும் என் நண்பணே வாழ்க வழமுடன்

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன்,நீங்களும்,கூக்குரலிடும் நம் கலாச்சாரமும்.

    ReplyDelete
  3. ஒரு தாயின் கண்ணீரை கவிதை வரிகளில் செதுக்கி இருக்கிறார் நண்பர் சாலிஹ் அவர்கள்... மிகவும் அற்புதமான வரிகள்...நீ
    மழலையாய்
    மடி தவழ்ந்த காலங்கள் - நான்
    துயில் துறந்தேன்...
    துதி பாடி, தூங்க வைத்தேன்.
    அமுதூட்டி !


    நீ
    மங்கையாய்
    படி தாண்டிய கணங்கள் - நான்
    மீண்டும் துயில் துறக்கிறேன். - இப்போது
    துயில் பாடுவது, நகர் மக்கள்
    நஞ்சூட்டி ..!
    நம் பிள்ளைகள் ஒருமுறை இந்த கவிதை நடையை கண்டிப்பாக பார்க்கணும்...அப்போதான் அவர்கள் தன பெற்றோர்களுக்கு எந்த அளவுக்கு துரோகம் செய்து இருக்கிறோம் என்று புரியும்...

    நண்பரே உங்களுடைய சிந்தனைகள் மிக அருமை.... உங்களுடைய பொதுநலனில் நாங்களும் இணைந்து கொள்கிறோம் நண்பா...

    ReplyDelete