தேடல்

Saturday 24 December 2011

மார்கழிப் பகைவர்கள்


காலம்
களவாடிய மிச்சங்கள்,
கைத்தடியை மறந்து விட்டு
கடுங்குளிர் பகைவனை விரட்ட,
கம்பளிக்குள் தலை மறைவு...
எதிரியை எதிர் கொள்ள  - புதிய
இராஜ தந்திர யுக்தி !?

அதிகாலை
டீக்கடை பெஞ்சுகள்,
தடை உத்தரவை தளர்த்த,
கதிரவனை துணைக்கு அழைக்கிறது..?

பொழுது விடிந்தும்
போனியாகவில்லை...
போண்டாக்களுக்கு ஆயுசு கெட்டி !

மழலை மொழியின்
சில்லறை சிணுங்கல்கள்,
பனியின் துணிவால்..
தவணை முறையில்,
அழுகையால் எதிர்க்கிறது..
நானும் உன் பகைவன் என்று...

நலம் குன்றிய
நபர்கள் மீது தீண்டாமை வழக்குகள் ??
தண்ணீரை ஒதுக்கி தள்ளியதால்....
இவர்களுக்கு,
சுடு தண்ணீர் மட்டும் தான் உயர் சாதி !

இலட்சங்கள்
கொன்று மார்பிள் தரை போட்ட,
இலட்சியவாதிகளை பழித்தீர்க்க..
மிகச் சரியான தருணம்.?
மார்கழிப் பனி தரை இறங்கி திட்டம்..!

கடற்கரை காற்றை
சுவாசிக்க சுதந்திரம் இல்லாமல்,
வீட்டு சிறையில் விசாரணை கைதியாய்..
கடற்கரைவாசிகள்...!

கனல் கக்கிய சித்திரையில்..
வியர்வையின் சித்திரை வதையில்,
மார்கழி கட்சியின் ஆட்சியை கேட்டோம்..
சித்திரை பகைவனானான்..

இப்போது,
ஆட்சி கட்டிலில் அரியணையேறிய,
மார்கழியின் கொடுங்கோலாட்சி கவிழ்க்க..
முதல் எதிரி சித்திரையை கேட்கிறோம்.?
மார்கழிப் பகைவர்கள் ஒன்று கூடி...

நண்பனும்,
சில நாள் பகைவனாகிறான்..
பகைவனும்,
ஒரு நாள் நண்பனாகிறான்...

அப்படியே..
வாழப் பழகி விட்டோம்..
வாழ்க்கை பழகி விட்டது...






5 comments:

  1. அருமையான மார்கழி திங்கள் கவிதை
    உங்களின் கவிசிறகடிக்க வாழ்த்துக்கள்..
    when you get time visit my
    http://thanjavur-raja.blogspot.com

    thanks thambi.. keep in touch

    ReplyDelete
  2. அருமையான தலைப்பு அருமையான கவிதை , நல்ல சிந்தனை தோழரே !
    இந்த வரிகள் மிகவும் பிடித்து இருந்தது
    கடற்கரை காற்றைசுவாசிக்க சுதந்திரம் இல்லாமல்,
    வீட்டு சிறையில் விசாரணை கைதியாய்..
    கடற்கரைவாசிகள்...!

    Regards
    இஸ்மாயில் மரிக்கா

    ReplyDelete
  3. super kavithai....nanbarukku "KAVITHAI SIRPPI" peyar vaikalam....intha kavithaiyil varum ovvoru varikalum miga miga arumai....athilum intha varikal இலட்சங்கள்
    கொன்று மார்பிள் தரை போட்ட,
    இலட்சியவாதிகளை பழித்தீர்க்க..
    மிகச் சரியான தருணம்.? super....

    ReplyDelete
  4. Tambi nice thinking, line by line superup ur thinking something different...

    நலம் குன்றிய
    நபர்கள் மீது தீண்டாமை வழக்குகள் ??
    தண்ணீரை ஒதுக்கி தள்ளியதால்....
    இவர்களுக்கு,
    சுடு தண்ணீர் மட்டும் தான் உயர் சாதி

    ReplyDelete