தேடல்

Sunday 21 April 2013

'தறுதலைக் கொல்லி' அமெரிக்காவே....

கொலம்பஸ் கண்டெடுத்த
கோமாளிகளின் தேசமே...
சமாதானம் பேசும் - நீ
போடுவதெல்லாம் வேசமே....

எய்ட்சின் தந்தைக்கு பிறந்த
சுரண்டலின் பிதாமகனே...


உன்
பார்வை விழுந்த தேசமெல்லாம்
பதற்றத்தால் எரிகிறது.!
உன்
கால் தடம் பதிந்த நாடுகளெல்லாம்
கண்ணீரால் நனைகிறது..!

அசிங்கங்களை
அரங்கேற்றும் அமெரிக்காவே...
உன்
கலாச்சாரம்
கால் பாதிக்கும் இடங்களிலெல்லாம்,
கண்ணியங்கள் காணாமல் போகிறது !

ஆயுதங்களை
கடை விரிக்கும் பயங்கரவாதியே...

நீ
நாடு பிடிக்க ஆடிய
நாடகங்களில் எல்லாம்
நாடிழந்தவர்கள் எத்தனை இலட்சம்..?
'நாடி' இழந்தவர்கள் எத்தனை கோடி...?

தீவிரவாதத்தை
உலக மயமாக்கிய
உலக கொலைகாரனே...

நீ..
பயங்கரவாத முத்திரை குத்தி
கிழிந்த முகமூடிகள் அத்தனையும்
நீ தானே..!

செவ்விந்தியர்களின்
பிணங்களின் மீது எழுப்பப்பட்டிருக்கும்
உன்
வெள்ளை மாளிகையின்
'கறுப்புப் பக்கங்கள்'...
இனப் படுகொலைகளை
'பச்சைக் கொடி' காட்டித் துவக்கிய
சரித்திரங்கள் சொல்கிறதே....

உலக
கட்டப்பஞ்சாயத்தில்
இலாபம் பார்த்த
உன்
சாபக் காசுகள்
'சுதந்திர தேவி' சிலையின்
தீப்பந்தத்தில் சுடாராய் எரிகிறதே....

கொல்லைப் புறத்தில்
கறுப்பின மக்களை
கொடுமைப்படுத்தி,
கொல்லாமல் கொல்லும்
அடக்கு முறை தேசமா...?
இங்கே எங்களிடம் அமைதி பேசுகிறது..!

'ஆயில்' நிறைந்த நாடுகளை
ஆயுள் முழுக்க அடிமையாக்கும்
அவசரகால பிரகடனம் தானோ....
அமெரிக்காவின்
'தீவிரவாத்திற்கு எதிரான போர்'..!

ஈராக்கில்
பதுக்கி வைத்ததாய் சொன்ன
பயங்கர ஆயுதங்கள் தேடப்பட்டனவே...
எண்ணெய் கிணறுகளில் மட்டும்.!

'அமெரிக்கா'
எங்காவது உதவிக் கரம் நீட்டி
உடனே கைகளை எடுத்தால்...
'கச்சா எண்ணெயும்'
கூடவே தான் வருகிறது..!
இது தான்
உன் பொருளாதார கொள்கையா.?

உலக நாடுகளில்
சுதந்திரம் பேசி...
உளவு பார்க்க பல்லாயிரம் கோடி .!
கலக நாடுகளில்
சமாதானம் பேசி....
காசு பார்க்கும் பலே கேடி.!

நீ
தோழமையோடு
தோள் கொடுக்க சென்ற
தேசங்களில் எல்லாம்
தேள் கொடுக்காய் தீண்டிய
துயரங்களை சொல்லத் தான் வேண்டுமா.?

நீ
ஹிரோஷிமாவில்
அணு குண்டை வீசி விட்டு எங்களுக்கு
அன்பை போதிக்கிறாயா.?

நீ
கியூபாவையும்,
கொரியாவையும்,
கொலைக் களம் ஆக்கி விட்டு
எங்களிடம் கருணை பேசுகிறாயா..?

நீ
வியத்நாமில்
வில்லத்தனம் செய்து விட்டு
இங்கே வீறுநடை போடுகிறாயா..?

ஆப்கானில் நீ செய்த
அட்டூழியங்கள் கொஞ்சமா...?

வெனிசுலாவை
வேட்டையாட நீ செய்த
வேள்விகள் கொஞ்சமா...?

சோமாலியாவுக்கு
நீ புரிந்த
சோதனைகள் மறக்குமா...?

பாலஸ்தீனத்தில்
இலட்சக்கணக்கில்
பச்சிளங் குழந்தைகளை
பலி தீர்த்து விட்டு
'மலாலா'விடம் மட்டும்
பாசத்தை பொழிகிறாய்....
என்ன.... பாசாங்கு செய்கிறாயா..??

அமெரிக்கா தலையிட்ட
அத்தனை தேசங்களும்
அமைதியை தழுவியதாம்....

ஆம்.......

மனித இனம் புதைக்கப்பட்ட
சுடுகாடுகள் எப்போதும்
அமைதியாகத் தானே இருக்கும்.!

அமரிக்கா செதுக்கிய
'பொம்மை' அரசாங்கங்கள்...
நாட்டாமை தீர்ப்பை
நடைமுறைப்படுத்தும் 'அவதாரங்கள்'....

புவியியல் ரீதியாக
அமைந்திட்ட பூமியை
சதியியல் புரிய
சந்தர்ப்பம் தேடும் 'சாத்தான்'
இப்போது வேதம் ஓதுகிறது...
ஐ.நா சபையில்....
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் !

உலக நாட்டாமை
கிழித்த கோடுகளில்
நிறைவேறியதாம் தீர்மானம்..?
'தறுதலைக் கொல்லி' அமெரிக்காவே....
கடைசி ஈழத் தமிழனையும்
கொன்று தீர்க்கவா...
நிறைவேறியது தீர்மானம்..??

நீ
இது வரை
சாட்சியங்கள் இல்லாமல்
சாகடித்த உயிர்களின் ஓலங்களை
சமாதியாக்கிய சாமர்த்தியத்தில்
இப்போது சமாதானம் பேசுகிறாயா..?

பிணங்களை
நக்கிப் பிழைத்த
உன் 'டாலர் கரன்சிகள்'
மலையாய் காட்டும்
மாயாஜால வித்தைகள்...
அதி விரைவில்....
நிழல் போல்
நிஜத்தையும் காட்டும்....
உண்மைகளை
உலகம் உணர்ந்திட.!

வினை விதைத்து
தினை அறுக்க நினைக்கும்
விலை மகனே....
நீ இல்லாத
நல்லுலகம் எப்போது..? எப்போது...?

 FACE BOOK COMMENTS :

'இன்று ஒரு தகவல்' முகப் பக்கத்தின் கருத்துப் பதிவுகள் : 

Unlike ·  · Share

No comments:

Post a Comment